இழை வெண்படல அழற்சி

இழை வெண்படல அழற்சி ஒரு நீடித்தக் கோளாறு ஆகும். சளி மற்றும் வெண்படல மேல்தோல் செல் ஒட்டி உருவாகும் இழைகள் வெண்படலப் பரப்பில் காணப்படும். சிதைவுற்ற மேல்தோல் செல்களும் சளியும் பல்வேறு வகையாக இணைந்து உருவான இழைகள் வெண்படலத்தின் ஒர் அற்றத்தில் சேர்ந்திருக்கும். முன் வெண்படல பரப்பில் சிறு, சளி இழைகள் காணப்படும். இவை அளவு, வடிவம், சேர்க்கை மற்றும் விநியோகத்தில் வேறுபட்டிருக்கும்.

விழிவெண்படலத்தின் முன் பரப்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும் குறிப்பிடத்தக்க இழைகளை முதன்முதலில் லெபர் 1982-ல் விவரித்தார் (Leber. Klin Monatsbl f Augenh; 1882. P. 165). 1935-ல் பீதம் விரிவான மீளாய்வையும் பலன்தரும் சிகிச்சை வாய்ப்புகளையும் வெளியிட்டார். கண்ணீர் சுரப்பி சிதைவால் இழைகள் உருவாகின்றன என்றும் இதற்குக் காரணம் தொற்று, நிணநீர்ச் சுரப்பி புற்று அல்லது இயக்குநீர் செயலிழப்பு போன்ற பல்வேறு மண்டலம்சார் காரணங்கள் எனவும் கோடிட்டுக் காட்டினார் (Beetham W. Filamentary Keratitis. Trans Am Ophthalmol Soc. 1935; 33: 413-435).

கண்ணீர் உற்பத்திக் குறைவினால் கண்சவ்வுக் குடுவை செல்கள் அதிகமாகச் சளியை உற்பத்தி செய்யலாம். நீர்க் குறைவு பட்டக் கண்ணில் அதிகமான இயல்புக்கு மாறான சிதைவுகளும் சளி இழைகளும் காணப்படும். இவைகள் வெண்படல மேல்தோலின் சிதைந்தப் பகுதிகளிலும் அடிப்படலத்திலும் ஒட்டிக்கொண்டு வெண்படல இழைகளை உருவாக்குகின்றன. வெண்படல மேல்தோல் இணைப்பின் கீழ் சாம்பல் மேல்தோல் சார் குருணைக்கட்டி ஒளிபுகாமை காணப்படலாம். ஒரு தடவை உருவாகிவிட்டால், வெண்படல இழைகள் கீழ் இருக்கும் வெண்படல் மேல்தோலில் உறுதியாக இணைந்து கொள்ளுகின்றன. வெண்படல இழைகளும் மேல் இமையும் உராய்வதால் வலி உண்டாகிறது. மேல்தோல் கண்ணீரும், அழற்சியும் சேர்ந்து மேலும் இழை உருவாவதற்கு வழி வகுக்கின்றன.

இழை வெண்படல அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பெரும்பாலும் அதிகமான அறிகுறிகளும், தொடர் வெளிப்பொருள் உறுத்தல் உணர்வும், சிவப்பும், ஒளிக்கூச்சமும் இருக்கும். இவை மிதமானதில் இருந்து கடுமையானது வரை வேறுபடும்.

இழை வெண்படல அழற்சி செயலாற்றலைப் பலவீனப்படுத்தும். கீழ் வரும் பல கண் மற்றும் மண்டலம் சார் கோளாறுகளின் பார்வைப் பாதிப்பு அம்சமாகவும் இது இருக்கும்:

 • உலர் கண் நோய்த்தாக்கம்: தன்தடுப்பு (ஜோக்ரன் நோய்த்தாக்கம்) மற்றும் தன்தடுப்பல்லாத ஆகிய இரண்டு வகையான நீர்ப்பசைக்குறைவு உலர்கண் நோய்நிலைகளிலும் வெண்படல இழைகள் காணப்படலாம். இதுவே இழை வெண்படல அழற்சிக்கான மிகவும் பொதுவான காரணம். இந்த மாற்றங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பட்டால் அது முதனிலை ஜோக்ரன் நோய்த்தாக்கம் ஆகும். இணைப்புத் திசுக்களோடும், உள்பரவிய செம்முருடு, எலும்புத்தசை அழற்சி, இளம்பருவ நீடித்தக் கீல்வாதம், ஹாஸ்மிமோட்டோஸ் தைராய்டழற்சி அல்லது முதல்நிலை நிணநீர் ஈரல் நோய்  போன்ற பிறநோய்களோடும் தொடர்புடையதாக இருந்தால் இரண்டாம் நிலை நோய்த்தாக்கம் ஆகும்.
 • மேல் சந்திப்பு (லிம்பிக்) உலர்கண் அழற்சி: இழை வெண்படல அழற்சியோடு தொடர்புடைய இரண்டாவது மிகவும் பொதுவான நோய் இது.
 • வெளிப்பட்ட வெண்படல அழற்சி.
 • வெண்படல வீக்கம்.
 • வெண்படல அறுவை உ-ம். வெண்படல விலகல் அறுவை.
 • பின்கண்புரை அறுவை.
 • விழிவில்லைப் பயன்பாடு.
 • அடினோவைரல் வெண்படல அழற்சி.
 • சிற்றக்கி வெண்படல அழற்சி.
 • நுண்ணுயிரி வெண்படல அழற்சி.
 • நரம்புமண்டல ஊட்டக்குறை வெண்படல நோய்.
 • மருந்துகளின் விளைவாக நீண்ட இமை மூடல்.
 • நீண்ட கண் ஒட்டு.
 • முகப்பரு.
 • சிறுநீர் இறக்கிகளின் மண்டலம் சார் பயன்பாடு.
 • எதிர்ஹிஸ்ட்டமின்களின் மண்டலம் சார் பயன்பாடு.

சில நேர்வுகளில் தொடர்புடைய நோய்கள் காணப்படுவதில்லை.

குறிப்புகள்:

http://www.ijsrp.org/research-paper-0315/ijsrp-p3994.pdf

http://eyewiki.aao.org/Filamentary_Keratitis

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2922815

http://iovs.arvojournals.org/article.aspx?articleid=2185853

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Jaypee- Highlights Medical Publishers (P) Ltd. 2012. P. 157.

Saxena S, Clinical Ophthalmology: Medical and Surgical Approach, 2nd ed. Jaypee-Highlights, 2011, New Delhi. P. 63.

Khurana A. K. Ophthalmology. New Age International (P) Limited. Third edition. 2003. P. 134.

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 213- 216.

Bowling Brad. Kanski's Clinical Ophthalmology - A Systematic Approach. Eighth Edition. Elsevier. 2016. P. 210.

Wright P. Filamentary keratitis. Trans Ophthalmol Soc UK 1975; 95: 260-266.

Zaidman GW, Geeraets R, Paylor RR, et al. The histopathology of filamentary keratitis. Arch Ophthalmol 1985;103:1178-1181.

Leber. Klin Monatsbl f Augenh; 1882. P. 165. German.

Beetham W. Filamentary Keratitis. Trans Am Ophthalmol Soc. 1935; 33: 413-435.

இழை வெண்படல அழற்சி நோயாளிகளுக்கு கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படலாம்:

 • அயல்பொருள் உணர்வு.
 • சிவப்பு.
 • கண்சிமிட்டல் அதிகரித்தல்.
 • உபாதைகள்.
 • கண்ணீர் அல்லது நீர் வடிதல்.
 • ஒளிக்கூச்சம்.
 • பார்வை மங்கல்.
 • இமைத்தசைகளின் இயல்பற்ற சுருக்கம்.

கண் சிமிட்டும் போது உறுத்தல் அதிகரித்து நாள் முழுவதும் இருக்கும். கண்களை மூடி இருக்கும் போது நோயாளிகளுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.

இழை வெண்படல அழற்சி கண் பரப்போடு சம்பந்தப்பட்ட பல நோய்களோடும் நோய்நிலைகளோடும் தொடர்புடையது.

இழைவெண்படல அழற்சியின் நோயியலோடு தொடர்புடையன:

 • கண்ணீர்ப்படலக் கூறுகளில் ஒரு மாற்றம் மற்றும்/அல்லது
 • வெண்படலப் பரப்பில் மாறுபாடுகள்.

பொதுவான ஆபத்துக் காரணிகளில் அடங்குவன:

 • கண்ணீர்க் குறைபாடு: உலர்கண் நோய் போல.
 • வெண்படலப் பரப்பைப் பாதிக்கும் மண்டலம்சார் நோய்கள்: உ-ம் ஜோக்ரன் நோய்த்தாக்கம்.
 • வெண்படல வெளித்தோன்றல்: ஏழாவது நரம்பு வாதம் போல.
 • கண் அறுவை: உ-ம். வெண்படல அறுவை, கண்புரை அறுவை.
 • எதிர்காலின்வினை மருந்துகள்: இவற்றை நீண்டநாள் பயன்படுத்துதல்.
 • மேல் இமை இறக்கம்: இதனால் கண்ணீர் விநியோகம் குறைபடும். மற்றும் வெண்படல மேல்தோல் செல்களுக்குச் செல்லும் உயிர்வளி குறையும்.

இழைகள் தோற்றத்தில் வழுவழுப்பாகவும் விலகல் தன்மை  கொண்டும் இருக்கும்; 0.5 மிமி காம்பற்ற ஒட்டுகளில் இருந்து 10 மிமி நீளமுள்ள இழைகளாக அளவில் வேறுபடும். ஒரு முனை வெண்படல மேல்தோல் அடித்தள படலத்தோடு பொதுவாக இணைந்திருக்கும். மறுமுனை சுதந்திரமாக அசையும். கீழ் உள்ள அடித்தளப் படலக் கோளாறுகளோடு இழை வெண்படல அழற்சி தொடர்புடையதாக இருக்கும். பெரும்பாலும் இவற்றில் பல அதியழுத்த கண்ணீர்ப்படல நிலையோடு தொடர்புடையவை. இழைகள் நீண்டு இமைகளின் நகர்ச்சிக்கு ஏற்ப சுருளுகின்றன.

கண்ணீரோடு ஒப்பிடும்போது சளியின் விகிதம் அதிகரிக்கிறது. காரணம்:

 • கண்ணீர் உற்பத்தி குறைதல் அல்லது
 • சளி உற்பத்தி அதிகரித்தல் அல்லது
 • அசாதாரண சளி திரட்சி.

இழை வெண்படல அழற்சியில் தொடர்புடைய நீர்க் கண்ணீர்படலக் கூறுக் குறைபாடு இருக்கும். இதனால் தொடர்புடைய சளிக்கூறு அதிகரிக்கும்.

கண் பரப்பின் கோளாறுகளால் வெண்படல மேல்தோலில் குறைபாடுகள் ஏற்படுவதால்  இழைகள் பதிய இடம் கிடைக்கிறது.

இழை வெண்படல அழற்சி மற்றும் உலர் கண்:

இழை வெண்படல அழற்சியோடு தொடர்புடைய பொதுவான கோளாறு உலர் கண் ஆகும். கண்ணீர் சுரப்புக் குறை அல்லது அதிகரித்த கண்ணீர் படலத் தேக்கநிலையால் கண்ணீர்ப்படல ஊடழுத்தம் கூடுகிறது. இதனால் சளிவிகிதம் கண்ணீர் விகிதத்தைவிட கூடுகிறது. இதனால் மேல்தோல் செல்கள் உரிந்து மேல்தோல் குறைவு ஏற்படுகிறது. உரிந்த மேல்தோல் செல்களின் வெளியேற்றும் அமைப்பாக சளி வினையாற்றுகிறது. சளியின் பிசுபிசுப்பு அதிகரிப்பதால் வெண்படல மேல்தோலின் மேடுபள்ளத்தில் ஒட்டிக்கொள்ளுகிறது. இது இழை உருவாக்கத்திற்கு உதவுகிறது.

ஒரு கண் மருத்துவரின் மூலம் செய்யப்படும் மருத்துவ வரலாறு மற்றும் பிளவு விளக்கு பரிசோதனை (உயிர்-நுண்ணாய்வியல்) இழை வெண்படல அழற்சியைக் கண்டறிய அடிப்படையாக அமைகிறது.

பிளவு விளக்கு பரிசோதனையில் குறிகள்:

 • வெண்படல இழைகள் (சளிமேற்தோல்செல் இழைகள்): பல சிறு, சாம்பல் நிற, சளி இழை இணைப்புகள் வெண்படலப் பரப்பில் பலமாக ஒட்டிக்கொண்டு இருக்கும். கண்சிமிட்டும் போது வலியுடன் இழைகள் இழுக்கப்பட்டு பிய்ந்து வரவும் வாய்ப்புண்டு. இதனால் வெண்படல மேற்தோல் குறைபாடு ஏற்படும். இந்த இழைகள் ரோஸ் பெங்கால் சாயத்தால் நன்கு சாயக்கறை ஏறும். ஆனால் ஒளிர் சோடியம் மற்றும் லிசமைன் பச்சைச் சாயக்கறையிலும் துலங்கும்.

அடிப்படையான காரணத்தைத் தீர்மானிக்க இழையின் இருப்பிடம் உதவலாம்.

உலர்கண் நோய்த்தாக்கத்திலும் வெளிப்படும் வெண்படலநோயிலும் இழைகள்: இவ்விரண்டிலும் இமை இடை வெளியில் இழைகள் பொதுவாகக் காணப்படும்.

இமை இறக்கம், தொடர் இமை மூடல் அல்லது மேல் சந்திப்பு (லிம்பிக்) உலர் கண் நோயால் இழைகள்: இவை வெண்படலத்தின் மேற்பகுதியில் காணப்படும்.

கண் அறுவை சிகிச்சையால் இழைகள்: காயம் அல்லது அறுவை செய்யப்பட்ட இடத்தில் இழைகள் காணப்படும்.

உதாரணமாக, வெண்படல ஒட்டு மாற்று சிகிச்சையைத் தொடர்ந்து உருவாகும் இழை ஒட்டு சந்திப்பில் உள்ள தையலின் அருகில் காணப்படும். கண்புரை அறுவைக்குப் பின் அவை வெண்படல வெட்டுக்கு மேல் அல்லது பக்கமாகக் காணப்படும். சரியான கண்ணீர் பாய்கை, திரள்தல், மருந்து நச்சு, பகுதிசார் காயம் ஆகிய அறுவைக்கான குறிப்பான காரணிகள் இழை உருவாவதை முன்னரே தீர்மானிக்கும்.

 • நீர்க் கண்ணீர் குறைவுபடுதல்: அசாதாரண கண்ணீர் உடைவு நேரத்தால் ஏற்படுவது.
 • சளிக் கூறு அதிகமாதல்: முன் – வெண்படல கண்ணீர் படலத்தில்.
 • மேலோட்டமான புள்ளி வெண்படல நோய்
 • சார் மேல் தோல் ஒளிபுகாமைஇழைகளின் அடிப்பகுதியில்.
 • மேல்தோல் குறைபாடுகள்: திறந்த வெண்படல மேல்தோல் குறைபாடுகள்.

திசுநோயியல்: சளி மற்றும் சிதைந்த மேல்தோல் செல்களால் உருவான இழையின் அடிப்பகுதி வெண்படல மேற்புறத் தோலில் ஒட்டிக் கொண்டு இருப்பதாக மரபாகக் கூறப்பட்டது.

ஆய்வாளர் ரைட், திசுவேதியல் சாயக்கறைகளைப் பயன்படுத்தி, வெண்படலப் பரப்பில் உள்ள ஏற்பிகளோடு சளி இணைந்து இழைகள் உருவாவதாகக் கூறினார். சளி, செல் மற்றும் பிற சிதைவுப் பொருட்களோடு திரள்வதால் மேலும் இழைகள் ஏற்படுகின்றன  (Wright P. Filamentary keratitis. Trans Ophthalmol Soc UK 1975; 95: 260-266).

செய்த்மேனும் பிறரும் மின்னியல் நுண்காட்டி ஆய்வின் மூலம், சிதறிய தொகுதியான அழற்சி செல்கள் மற்றும் நாருற்பத்தி செல்கள் இழைகள் இணைந்திருக்கும் வெண்படல மேற்புறத் தோலின் அடித்தளப் படலத்தில் இருப்பதாகக் கூறினர் (Zaidman GW, Geeraets R, Paylor RR, et al. The histopathology of filamentary keratitis. Arch Ophthalmol 1985; 103:1178-1181).  அடிப்படையான ஒரு திசுநோயியல் செயல்முறை அடித்தள மேற்புறத் தோலை சிதைத்து, போமன் அடுக்கில் இருந்து பிரியும் குவி பகுதிக்கு கொண்டுசெல்வதாகக் கூறப்பட்டது.  இந்த உயர்ந்த மேற்புறத் தோலே சளி மற்றும் சிதைவு செல்கள் அடையும் கூடாக விளங்குகிறது.

தேனியோக்காவும் பிறரும் வெண்படல மேற்தோல் செல்கள் இழையின் மையமாகவும், பன்பரப்பு சளிகள், டி.என்,ஏ பொருட்கள் மற்றும் சிதைந்த வெண்படல மேல்தோல் செல்கள் மையத்தைச் சுற்றி ஒரு பின்னல் வடிவத்தை உண்டாக்குகின்றன என்று முன்மொழிந்தனர் (Tanioka H, Yokoi N, Komuro A, et al. Investigationof the corneal filament in filamentary keratitis. Invest Ophthalmol Vis Sci 2009; 50: 3696-3702).

வெண்படல அழுத்த திசுவியல், செதிள் அசாதாரண திசுமாற்றத்தையும் அழற்சி செல் ஊடுறுவலோடு குடுவை செல் குறைவையும் காட்டுகிறது(http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2922815).

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

இழை வெண்படல அழற்சியை எளிதாகக் கண்டறியலாம். ஆனால் அதன் மேலாண்மையும் தீர்வும் சவாலானது.

உலர் கண் நோய் அல்லது இமையழற்சி போன்ற கீழிருக்கும் நோய்களுக்கு முதலில் சிகிச்சை அளித்து கண் பரப்பை மேம்படுத்த வேண்டும். உலர் கண் நோய், நச்சு வெண்படல அழற்சி, மிகையாக விழிவில்லை அணிதல் அல்லது இமையிறக்கம் போன்ற இழை உருவாவதற்குக் காரணமான அடிக் காரணங்களை முதலில் இனங்கண்டு அறிந்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இழை வெண்படல அழற்சிக்கு பல காரணி நோயியல் இருப்பதால், இநோய்க்கு சிகிச்சை அளிப்பது நோயாளிக்கும் மருத்துவருக்கும் வெறுப்பளிப்பதாக இருக்கும்.

மருத்துவ சிகிச்சை

இழை வெண்படல அழற்சி நீடித்த அல்லது கடுமையான நோயாகத் தோன்றலாம். சில கடுமையான நிலைகள் தானாகவே மறையும். ஆனால் பல வேளைகளில் சிகிச்சை தொடர்ந்து இது நீடித்த நிலையாக மாறும். நோய் முன்னேறாமல் தடுக்க சிகிச்சை அளிக்க வேண்டும். உலர்தல் அல்லது காயத்தால் வெண்படலப் பரப்பு மேலும் சேதமுறாமல் பாதுகாக்க வேண்டும். மேற்பூச்சு மருந்துகளைக் கவனமாகக் கையாள வேண்டும். ஏனெனில் மருந்துகளின் உள்ளார்ந்த மற்றும் நிலைத்த நச்சுத்தன்மையால் வெண்படலம் எளிதில் பாதிக்கப்படும்.

 • மேற்பூச்சு செயற்கைக் கண்ணீர்: பகல் நேரத்தில் மேற்பூச்சு செயற்கைக் கண்ணீர் மற்றும் படுக்கை நேரத்தில் களிம்பு அல்லது அதிக மசகுள்ள கன்ணீர்களைப் பயன்படுத்துவதே முதல் கட்ட சிகிச்சை ஆகும். பொதுவாகப், பாதுகாத்து வைக்கப்படாத கண்ணீர் மாற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த மசகுத்தன்மை கொண்ட கண்ணீர்கள் கண்ணீர்ப்படல ஊடழுத்தத்தை மேம்படுத்தக் கூடும். ஆனால், நுண் வெண்படல சிராய்ப்புகளுக்கு  அதிக மசகுள்ள பதிலிகள் நல்ல நிவாரணம் அளிக்கும். ஒரு நோயாளிக்கு சிறந்த பலனை அளிக்கும் கண்ணீர்ப் பதிலிகள் சோதனை மூலம் தெரிவு செய்யப்படுகிறது. பல வகையான பதிலிகள் உள்ளன. குறிப்பிட்ட நோயாளிக்கு குறிப்பிட்ட ஒன்று பலன் தரலாம்.
 • மேற்பூச்சு சோடியம் குளோரைடு: வீக்கத்தைக் குறைத்தும் குவியப் பிரிகையை அகற்றியும் சில நோயாளிகளில் இது வெண்படல மேல்தோலை மேம்படுத்துகிறது.
 • என்அசெட்டைல்சிஸ்ட்டின்: சளிமுறிவு மருந்தான இது சளியின் பாகுத் தன்மையை முன் – வெண்படல கண்ணீர்ப் படலத்தில் குறைக்கிறது. கண் மருந்து வணிக ரீதியாகக் கிடைப்பதில்லை. எனவே பதப்படுத்திகள் இல்லாமல் சுவாச மருந்துகளில் இருந்து தயாரிக்க வேண்டும்.
 • கட்டுக் கண் வில்லை: கண் மசகு மருந்துகளுக்குப் பலன் கிடைக்காத போது இழை வெண்படல அழற்சிக்குக் கட்டு கண் வில்லைகள் பலனளிக்கும். இந்தக் கண்வில்லை வெண்படல மேல்தோலும் இமைகளும் உரசுவதைத் தடுக்கிறது. இதனால் நிலைமையை அதிகரிக்கும் வகையில் பெரும்பாலும் ஏற்படும் எதிர்வினை இமையிறக்கத்தை ஒழிக்கும் அல்லது குறைக்கும். அதி உயிர்வளி அனுமதிக்கும் மென் வில்லைகளை அதிக சகிப்புத் தன்மைக்காகப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட கண் பரப்பில் உலர் கண்  நோய் உள்ள நோயாளிகளுக்கு வில்லையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்காக (உ-ம். தொற்று வெண்படல அழற்சி) கூர்மையாக கவனிக்க வேண்டும்.
 • மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: மீதைல் பிரெட்னி சோலோன் போன்ற மேற்பூச்சு கோர்ட்டிக்கோ ஸ்டிராய்டுகள் அழற்சியைக் குறைக்கலாம். பெரும்பாலும் குறுகிய கால அளவுகளுக்கு கொடுப்பதே அறிகுறிகளை திருப்திகரமான முறையில் குறைக்கிறது.  இவை உட்கண் அழுத்தத்தையும் புரை உருவாதலையும் ஊக்குவிப்பதால் கடும் நோய் காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
 • மேற்பூச்சு ஊக்கமருந்தல்லாத எதிர் அழற்சி மருந்துகள்: அழற்சியைக் குறைத்து நோய் குணமடைவதைத் துரிதப்படுத்துகிறது. உலர் கண் நோயாளிகளின் சிதைவடைந்த மேல்தோலில் இம்மருந்துகளின் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் விளைவுகளை அவை அளிக்கும் பலனோடு ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.                                                                                                                                          இதனோடு தொடர்புடைய மெய்போமியன் சுரப்பி செயலிழப்பிற்கு, இமை சுத்தம், மேற்பூச்சு அசித்ரோமைசின், வாய்வழி டெட்ராசைக்கிளின் சார்மருந்துகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சிகிச்சைகள் தேவைப்படலாம்.

உலர் கண் சிகிச்சைக்கு மேற்பூச்சு சைக்ளோஸ்போரினைக் தேர்ந்து எடுக்கலாம்.

அறுவை சிகிச்சை:

 • இழை நீக்கல்: மேற்பரப்பு மயக்க மருந்து அளித்து பிளவு விளக்கில் இழைகள் அகற்றப்படும். இழையின் அடிப்பகுதியில் இருக்கும் வெண்படல மேல்தோல் சேதம் அடையாமல் முழு இழையையும் கவனமாக அகற்ற வேண்டும்.  பலநாட்களுக்கு அறுவைக்குப் பின்னான மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லிகள், அசௌகரியத்தைக் குறைக்க மசகு களிம்புகள் கொண்ட அழுத்த ஒட்டு அல்லது ஒரு கட்டு விழிவில்லை பயன்படுத்த வேண்டும்.
 • கண்ணீர்முனை அடைப்பு: சில நேர்வுகளில் இது நீர்க் கண்ணீர்க் கூறை அதிகரிக்கலாம். நிரந்தரத் தடைக்கு முன்னர் தற்காலிகமான அடைப்புகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில் பல நேர்வுகளில் தற்காலிகக் கண்ணீர்ப் படல கன அளவு மேம்பாடு இழை வெண்படல அழற்சியைச் சரிசெய்யலாம். இதனால் நிரந்தர கண்ணீர்முனை அடைப்பு தேவைப்படாமல் போகலாம். கண்ணீர் முனை அடைப்பில் இருந்து உருவாகும் கண்ணீர்ப் படலத்தில் சளி தேங்குவதைக் குறைக்க தொடர்புடைய மெய்போமியன் சுரப்பி செயலிழப்புக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

நோய்முன் கண்டறிதல்:

இழை வெண்படல அழற்சியை முன் கண்டறிதல் பொதுவாக நன்மை பயக்கும். அது முன்நிலையை தகுந்தபடி கட்டுப்படுத்துவதைப் பொறுத்தது ஆகும். சில வேளைகளில் இந்த நோய் நிலையை சமாளிக்க நோயாளிக்கும் மருத்துவருக்கும் பொறுமை தேவைப்படும்.

 • PUBLISHED DATE : May 16, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : May 16, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.