ஆயு மற்றும் வேதா என்ற சொற்களில் இருந்து ஆயுர்வேதம் என்ற சொல் உருவானது. ஆயு என்றால் வாழ்க்கை என்றும் வேதா என்றால் அறிவியல் அல்லது அறிவு என்றும் பொருள். ஆயுர்வேதா என்பதற்கு வாழ்க்கை அறிவியல் என்று அர்த்தம். “ஆயுர்வேதம் என்று அழைக்கப்படும் அறிவியல் வாழ்க்கையின் சாதக பாதகங்களையும், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியற்ற நிலைகளோடு வாழ்க்கைக்கு நன்மை மற்றும் தீமை தருபவற்றையும், வாழ்க்கையின் அளவீட்டையும் மொத்தத்தில் வாழ்க்கையையும் குறித்துக் கூறுகிறது” என்று சரகர் வரையறுக்கிறார்” (சரக சூத்திரம் 1-4). ஆயுர்வேதம் மனிதனை உள்ளடக்கிய அனைத்து உயிருள்ள பொருட்களையும் தழுவியது. இது மூன்று முக்கிய கிளைகளாகப் பகுக்கப்படுகிறது: நர ஆயுர்வேதம் மனித வாழ்கையையும், சத்துவ ஆயுர்வேதம் விலங்குகளின் வாழ்க்கையையும் நோய்களையும், விருக்ஷ ஆயுர்வேதம் தாவர வாழ்க்கையையும், அதன் வளர்ச்சி மற்றும் நோய்களையும் பற்றிய அறிவியலாகும். ஆயுர்வேதம் ஒரு மருத்துவ முறை மட்டும் அல்லாமல், முழுமையான நேரிய ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக மேம்பாட்டுக்கும் உரிய வழியுமாகும் என்பது தெள்ளத் தெளிவாகும்.
வாழ்க்கையின் நான்கு விருப்பமான இலக்குகளை அடைய நேரிய ஆரோக்கியம் அடிப்படையானது என்று ஆயுர்வேதம் நம்புகிறது. அவைகளாவன: தர்மம், அர்த்தம், காமம், மோட்சம். நேரிய ஆரோக்கியம் இல்லாமல் இந்த நான்கு இலக்குகளையும் அடைய இயலாது.
நேரிய ஆரோக்கியம் பின்வருமாறு அறுதியிடப்படுகிறது:
(அ) சிறந்த சமநிலையுள்ள வளர்சிதை மாற்றம்
(ஆ) ஆன்மா, புலன்கள், மனம் ஆகியவற்றின் மகிழ்ச்சியான நிலை. புலன்கள் என்பது இங்கு ஐம்புலன்களைக் குறிக்கிறது: மணம், சுவை, பார்வை, தொடு உணர்வு, செவிப்புலன். இவற்றோடு செயல் உறுப்புகளும் இணைகின்றன: வாய், கைகள், கால்கள், கழிவு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள்.
குறிப்புகள்:
e-Samhita - National Institute of Indian Medical Heritage
www.indigenousmedimini.gov.lk/